Author: vettaiperumal
•2:34 AM
ராமசந்திரனைப் பற்றி இப்போதைக்கு அதிகம் எழுதவேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் தொடராகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்னைத் தெரிந்தவர்களோ இல்லை ராமசந்திரனைத் தெரிந்தவளோ முகம் சுளிக்கலாம்... தெருவில் கூடிக்களிக்கும் நாய்களைப் பார்ப்பதுபோல் ‘இதுகளுக்கு வேற வேலையில்ல’ என்று அருவருப்படையாலாம். ‘ரொம்ம்ப முக்கியம்’ என்று எரிச்சலடையலாம். இதையெல்லாம் விட, அதிர்ஷ்டவசமாக(?) சம்பந்தப்பட்ட ராமச்சந்திரனே என்னைத் தொடர்புகொள்ளலாம். இந்தப் பேராபத்துகளைச் சந்திக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை. ஆனால் விதிவிடுமா?
நண்பன் குணா பிளாக்கைப் படித்துவிட்டு சாட்டில் வந்து தொணத்தியெடுத்துவிட்டார்.
‘குரு....(அவருக்கு நான் குருவாம்... ஹய்ய்யோ ஹய்ய்யோ) அவர் ஏன் சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைத்தும் பாடவில்லை?’ என்று அவர் கேட்ட நியாயமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது?
‘அவன் அப்படித்தான்’ என்றேன். அத்தோடு பொத்திக்கொண்டிருந்தால் அவரும் நிறுத்தியிருப்பார். ஆனால், உபரித் தகவலாக ‘அந்த வாய்ப்பு இன்னும் இருக்கிறது’ என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். ஒரே பிடியாகப் படித்துக்கொண்டார். ‘அப்படின்னா, அவர நீங்க கண்டிப்பா சினிமாவுல பாடவைக்கணும். நீங்க மனசுவச்சா முடியும்’ என்றார், விஷயம் புரியாமல். ‘இல்லை நண்பா அது நடக்குற காரியம் இல்ல... அவனைப் பற்றி உங்களுக்குத் தெரியாது ’ என்று எவ்வளவோ சொல்லியும் அவர் விடவில்லை. ‘முடியும்... உங்களால் முடியும்... அவரின் நண்பனுக்கும் மேலாக நீங்களிருந்தால் முடியும்’ என்று ‘உன்னால் முடியும்’ உதயமூர்த்தி கணக்காக உணர்ச்சிவசப்பட்டார். ‘அடக் கொடுமையே இதுக்கு ராமச்சந்திரனே பரவாயில்லையே’ என்று தான் அந்தக் கணம் தோன்றியது. ஆனால் நண்பர் குணா ஆதங்கப்டுவதிலும் அர்த்தம் உண்டு தானே?
சினிமாவில் பாட வாய்ப்கிடைத்தால் எந்தக் கேணப்பயலாவது மிஸ் பண்ணுவானா? ‘அவனவன் நாயாப் பேயா வாய்ப்புத் தேடி அலையிறான். நல்லாப் பாடத்தெரிஞ்சவன் கூட சினிமா வாய்ப்புக்காக, டி.வி. ஷோவில் கோமாளி வேஷங்கட்டிக் கூத்தாடுறான். அம்சமாப் பாடுற பொண்ணெல்லாம் அரையும் குறையுமா டிரஸைப் போட்டுக்கிட்டு ஆடுதுங்க. சினிமாவில் பாடிப் பிரபலமானவனே ‘நிலாக் காயுது...ம்ம்ம்..... நேரம் நல்ல நேரம்...ம்ம்ம்....’னுமேடையிலே தலகாணியப் போட்டுப் படுத்துக்கிறான். தமிழகத்தின் தங்கக் குரலுக்குச் சொந்தக்காரன், தொப்பூள் தெரிய பஞ்சகச்சம் கட்டிக்குட்டு ஆடத் தெரியாம அல்லாடுறான். இந்த ராமச்சந்திரனுக்கு என்ன கேடு?’ என்று நீங்கள் கூட நினைக்கலாம்.
வாய்ப்புத் தேடி அலையறவன் படும்பாட்டை எத்தனை சினிமாவில் பார்த்திருப்போம்.. கொட்டும் மழையில் நனைந்தபடி மியூசிக் டைரக்டர் காலைப்பிடித்துக்கொண்டு, ‘ஏ...நிலவே...ஏ...நிலவே....?’ என்று தொண்டை கிழிய அஜித் கத்தாத கத்தா?
தேன்மதுரக் குரலுடைய கதாநாயகி(சினிமாவுல மட்டும் தான்...நேர்ல அந்தக் குரலைக் கேட்டா, ஈரக்கொலையைக் கையில புடிச்சுகிட்டு ஓடணும்...ஆமா) கண்ணீர் வழிய.....லாலாலாலாலாலா.... என்று யாருக்கோ கோரஸ் பாடும் கொடுமைதான் என்ன? ஆனால் இந்த டாகால்டி வேலையெல்லாம் நம்ம ராமச்சந்திரன் கிட்ட பலிக்காது. அவர் கதையில் எல்லமே உல்டா தான். சினிமா வாய்ப்புக் கொடுத்த டைரக்டர் மகராசனையும், மியூசிக் டைரக்டரையும் முதன் முதலில் அய்யா சந்திக்க வந்த அழகு இருக்கே.... அட..அட...அட...
அதற்கு முன்னால் இந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என்று சொல்லிவிடுகிறேன்.
அறிமுக இயக்குநர் துரை.ரவிச்சந்திரன்(அமுதசுரபி) எனது நண்பன் வன்மியின் நெருங்கிய தோழர். எனக்கும் நல்ல நண்பர் தான். வன்மி அவரிடம் அஸோசியேட் டைரக்டராக இருக்கிறார். இவர்கள் இருவரையும் சந்திக்கப் போன இடத்தில் ராமச்சந்திரனின் பாட்டுத் திறமையைப் பற்றி ‘ஆஹா, ஓஹோ’ என்று எடுத்துவிட்டேன். அதுதான் நான் செய்த ஒரே தவறு. மனிதர் மறுபேச்சே பேசவில்லை. ‘அழைச்சுட்டு வாங்க... நம்ம படத்தில இன்னும் ரெண்டு பாட்டு ரெங்காடிங் முடியல.. வாய்ஸ் நல்லாயிருந்தா பாடவச்சிடலாம்’ என்றார். இது சினிமாக்காரன் பேச்சல்ல. சத்தியமான பேச்சு. இயக்குநர் தங்கமான மனிதர். அதிலும் நம்ம ஊர்காரர். நான் ஒரு கழுதைக்கு ரெகமண்ட் பண்ணியிருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார்.
‘எப்போ அழைச்சுட்டு வர்றீங்க?’
‘இல்ல.... அவன் இப்ப தஞ்சாவூர்ல இருக்கான். எனக்கு ரெண்டு நாள் டயம் கொடுங்க’ என்றேன்.
‘எப்போ வேணும்னாலும் கூட்டிட்டு வாங்க. ஆனா வரும்முன்னாடி எனக்கொரு ஃபோன் பண்ணிட்டு வாங்க’ என்றார். எனக்கு ஏழரைச் சனி தொடங்கிவிட்டது. இது மயிரைக் கட்டி மலையை இழுக்கும் காரியம். இழுத்துப் பார்த்துவிடுவோம் என்ற குருட்டு நம்பிக்கை எனக்கு. வீட்டுக்கு வந்ததும் வராததுமாக ராமச்சந்திரனிடம் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது என்று மனதிற்குள்ளே பேசிப்பார்த்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் ஃபோன் போட்டேன். அவனிடம் சொல் ஃபோன் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த நம்பர் என்னிடம் இல்லை. காரணம் ராம் (வசதிக்கா இனி அப்படியே அழைக்கலாம்..) நியூயார்கிலிருந்து நான்கு நாட்களுக்கு முன்புதான் திரும்பியிருந்தான். இதுவும் என்னுடைய குருட்டுநம்பிக்கைதான் தான்.
ஒருவேளை அவன் வந்திருக்கலாம்.... இல்லை வராமலும் இருக்காலாம். பத்துபதினைந்து நாட்களுக்கு முன்னால் பேஸ்புக் சாட்டில் வந்தவன், இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு மொத்தமாகத் திரும்பப்போவதாகச் சொல்லியிருந்தான். அவன் கண்டிப்பாக வந்துவிடுவான் என்று தெரியும். காரணம் நியூயார்க்கிலிருந்து அவசரஅவசரமாக குடும்பத்தோடு திரும்பவதற்கு அவன் சொன்ன காரணம் அத்தனை முக்கியமானது.
எனவே, ஊர்பட்ட கடவுளை வேண்டிக்கொண்டு அவன் வீட்டிற்கு ஃபோன் போட்டேன். அவனுடைய அப்பா தான் எடுத்தார். ‘ராம்..... என்று நான் சொல்லி வாய்மூடுவதற்குள்.... இதா கூப்பிடுறேன்பா...’ என்று அவர் சொன்னதும் என் படபடப்பு பலமடங்காக எகிறியது. ‘பெருமால்லே.....எப்ப்டியிருக்கே..... ?’ என்று சந்தோஷமாக கூப்பாடுபோட்டவன், அடுந்தநெடியே....‘ங்கோத்தா..... ஒரு போன் பண்ணியாடா...சரியான வெட்டிக் கூ.. டா நீ....’என்றான் கொஞ்சம் சத்தத்தைக் குறைத்துக்கொண்டு. அவன் பேசிய இடம் வீடாக இருந்ததால் இந்த மட்டில் முடிந்தது. ‘ஹே ஹே ஹே.... எனக் கேணத்தனமாக சிரித்து.....ஒப்புக்காக எதையெதையோ பேசி.... எதிர்காலம்....மண்ணாங்கட்டி என்று உளறிக்கொட்டி.... கடைசியில் விஷயத்தைச் சொன்னேன். ஒரே வார்த்தையில் இப்படிச் சொன்னான்.
‘பார்க்கலாம்....வேட்டை....’

முடிய்ய்யயல...... மிச்சத்தை நாளைக்கு எழுதுறேன்.


|
This entry was posted on 2:34 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On July 1, 2010 at 4:33 AM , noel gorky said...
This comment has been removed by the author.
 
On July 1, 2010 at 4:35 AM , noel gorky said...

உங்கள் ரமச்சந்திரனை தினமும் படிக்கிரேன், உங்கள் வாசகனாக ஆகிவிடுவேன் போல,வாழ்த்துக்கள் வேட்டைப்பெருமால்

 
On July 1, 2010 at 9:13 PM , Guna said...

நன்றி குரு... ஒரு வேலை அவர் தானாக எந்த உதவியும் இன்றி தன் திறமையை காட்ட விரும்புகிறாரோ??

 
On July 2, 2010 at 12:04 AM , vettaiperumal said...

நான் எதையும் நீக்கவில்லை நோயல். அந்த பின்னூட்டத்தை மீண்டும் போடவும்.
குணா.... நீங்கள் என்ன கேள்வியின் நாயகனா? தொடர்ந்து படியுங்கள் அப்போதுதான் உங்களுக்கு விஷயம் புரியும். அவசரப்படவேண்டாம்.

 
On July 2, 2010 at 7:24 AM , prabhakaran said...

vadivelu mathiri varthai slang nalla irukku. thodarnthu ezhuthunga

 
On July 6, 2010 at 10:00 PM , Unknown said...

nalla tamil.. yatharthamaaga irukirathu... arvaamum kuda....

 
On July 6, 2010 at 10:00 PM , Unknown said...

thodarnthu ezhuthungal.. naan kandipaga padikiren thalaiva...

 
On July 7, 2010 at 8:56 PM , http://rkguru.blogspot.com/ said...

நல்ல எழுது நயம்...வாழ்க

 
On July 7, 2010 at 10:50 PM , Unknown said...

ராமச்சந்திரன் நல்ல பெயர் தேர்வு.. தொடருங்கள் நண்பா..

 
On July 8, 2010 at 10:24 PM , vettaiperumal said...

நன்றி நண்பர்களே